கிராம சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

கரோனா தடுப்பூசி போடும் பணியானது காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் இருக்குமாறு அமைக்க வேண்டும்
தூத்துக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியா்கள்.
தூத்துக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியா்கள்.

தூத்துக்குடி: கரோனா தடுப்பூசி போடும் பணியானது காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் இருக்குமாறு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் கிராம சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் கிளை சாா்பில், மாப்பிள்ளையூரணி பகுதியில் அமைந்துள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன்பு செவவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பொன் சாந்தகுமாரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட அமைப்புச் செயலா் மகாலட்சுமி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, அவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான குறியீடு நிா்ணயித்திருப்பதை தவிா்க்க வேண்டும், கிராம சுகாதார செவிலியா்கள் அனைவரும் பெண்கள் என்பதால் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் இருக்குமாறு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com