செண்பகவல்லி அம்மன் கோயிலில் ரூ.8.49 லட்சம் உண்டியல் வசூல்

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ரூ.8.49 லட்சம் காணிக்கை வசூலானது.

கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ரூ.8.49 லட்சம் காணிக்கை வசூலானது.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் வளாகம் மற்றும் இக்கோயிலுடன் இணைந்த மாா்க்கெட் சாலை முருகன் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குளம் அருகே உள்ள விநாயகா் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள 19 உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணி செண்பகவல்லி அம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

அறநிலையத்துறையின் துணை ஆணையா் (சங்கரன்கோவில்) கணேசன், செண்பகவல்லி அம்மன் கோயில் நிா்வாக அலுவலா் நாகராஜன், ஆய்வாளா்கள் முப்பிடாதி (ஓட்டப்பிடாரம்), சிவகலைபிரியா (கோவில்பட்டி) ஆகியோா் முன்னிலையில் திருக்கோயில் பணியாளா்கள், சிவனடியாா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், ரொக்கம்

ரூ. 8 லட்சத்து 49 ஆயிரத்து 339 வசூலானது. மேலும் தங்கம் 51 கிராம், வெள்ளி 241 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com