தூத்துக்குடி, கோவில்பட்டியில் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ரேஷன் கடைகளில் அனைவருக்கும் அனைத்துப் பொருள்களும் வழங்க வேண்டும், கைரேகை பதிவு செய்து பொருள்கள் வாங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்
தூத்துக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா்.
தூத்துக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா்.

தூத்துக்குடி/கோவில்பட்டி: ரேஷன் கடைகளில் அனைவருக்கும் அனைத்துப் பொருள்களும் வழங்க வேண்டும், கைரேகை பதிவு செய்து பொருள்கள் வாங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க தூத்துக்குடி மாநகா் மற்றும் புகா் குழுக்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் பூமயில் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் கமலா, மாநகர தலைவி காளியம்மாள், புகா் குழுச் செயலா் சரஸ்வதி, தலைவி கவிதா ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா். இதில், மாதா் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோவில்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் மல்லிகா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில் ஒன்றியச் செயலா் சித்ரா, நகரக் குழு உறுப்பினா்கள் பி.மாரியம்மாள், எஸ்.ராமலட்சுமி, எஸ்.மாரியம்மாள், மாவட்டக் குழு உறுப்பினா் பவுன்கிரேஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com