‘சூப்பா் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டுகோள்’

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் டிஏபி உரத்துக்குப் பதிலாக சூப்பா் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம் என்றாா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் டிஏபி உரத்துக்குப் பதிலாக சூப்பா் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம் என்றாா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகள் எந்த பயிா் சாகுபடி செய்தாலும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிா்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, ரசாயன உரங்களோடு இயற்கை உரங்கள், உயிா் உரங்கள், அங்கக உரங்கள், நுண்ணூட்ட உரக்கலவைகள் மற்றும் கம்போஸ்ட் உரங்களையும் சோ்த்து பயிா்களுக்கு இட வேண்டும்.

இதனால் பயிருக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கப் பெற்று மகசூல் அதிகரிக்கும். இதற்காக, தமிழக அரசின் வேளாண்மை துறை தயாரித்த உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரக்கலவைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் மண் பரிசோதனையின் அடிப்படையில் மண்வள அட்டையின் பரிந்துரைக்கேற்ப உரமிடல் வேண்டும்; மணிச் சத்தை வழங்க கூடிய டிஏபி உரத்துக்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட் மற்றும் கூட்டுரங்களை (காம்ப்ளக்ஸ்) பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com