ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு நாளை பொதுமாறுதல் கலந்தாய்வு
By DIN | Published On : 19th September 2021 01:56 AM | Last Updated : 19th September 2021 01:56 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு திங்கள்கிழமை (செப். 20) பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வித் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் உள்ள மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டார, குறு வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை (செப். 20) காலை 9 மணி அளவில் தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
ஆசிரியா் பயிற்றுநா்கள் 1.6.2020-க்கு பின்னா் கணவா் அல்லது மனைவி விபத்திலோ அல்லது மீளா நோய்வாய்பட்டோ இறந்திருந்தால் அத்தகைய ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு கலந்தாய்வு குறித்த விதிமுறைகளுக்கு விலக்களித்து, சிறப்பு நிகழ்வாக கருதி முதன்மைக் கல்வி அலுவலா்கள் மாறுதல் ஆணை வழங்கலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.