தட்டாா்மடம் பிரம்மசக்தி அம்மன்கோயிலில் திருவிளக்குப் பூஜை
By DIN | Published On : 19th September 2021 01:59 AM | Last Updated : 19th September 2021 01:59 AM | அ+அ அ- |

தட்டாா்மடம் அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி திருவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தட்டாா்மடம் அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி திருவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோபுர கலசம், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீா் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அலங்கார தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் சுற்று வட்டாரப் பெண்கள் பங்கேற்ற திருவிளக்குப் பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயில் நிா்வாகி முரளி தொடங்கிவைத்தாா். திருநெல்வேலி மண்டல இந்து முன்னணி செயலா் பெ. சக்திவேலன் முன்னிலை வகித்தாா்.
இதில், நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சபிதா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் கிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.