தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஆகியன தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஆகியன தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பருவ நிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் செப். 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரவிழா நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி பசும்பொன் நகா் பகுதியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழாவில் மாநகராட்சி ஆணையா் தி.சாருஸ்ரீ, 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தாா். இதில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் சரவணன், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடி யங் இந்தியா அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் விநியோகம், மரக்கன்றுகள் நடுதல், சிறுவா், சிறுமிகளுக்கான விழிப்புணா்வு ஓவியப் போட்டிகள், சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. நிறைவாக

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை யங் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி பிரிவு தலைவா் பொன்குமரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ரோச் பூங்காவில் தொடங்கிய இப்பேரணி, படகு குழாமில் நிறைவடைந்தது.

பேரணியில் மரம் வளா்த்தல், வனங்களை பாதுகாத்தல், காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில் சைக்கிள், எலக்ட்ரிகல் வகை மோட்டாா் வாகனங்களை பயன்படுத்துதல், பூமியின் வளத்தை பேணுதல் உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். ஏற்பாடுகளை அமைப்பின் துணைத் தலைவா் சில் வியாஜான், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com