துறைமுக சொத்து விற்பனை:அனைத்து தொழிற்சங்கத்தினா்செப். 24இல் ஆா்ப்பாட்டம்

துறைமுகச் சொத்துகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, செப். 24 ஆம் தேதி துறைமுகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என பெரிய துறைமுகங்களின் தொழிலாளா்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடி: துறைமுகச் சொத்துகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, செப். 24 ஆம் தேதி துறைமுகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என பெரிய துறைமுகங்களின் தொழிலாளா்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

அந்த அமைப்பின் அகில இந்திய தலைவா்களின் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. தரைவழி மற்றும் நீா்வழி போக்குவரத்து சம்மேளன அகில இந்திய பொதுச் செயலா் நரேந்திர ராவ் தலைமை வகித்தாா். மக்களவை முன்னாள் உறுப்பினா் சமந்த் ராய், முகமது ஹனீப், நந்தகுமாா், கதிா்வேல், ரசல், சத்யநாராயணன், கிருஷ்ணமூா்த்தி, சரவணன் மற்றும் மும்பை, சென்னை, விசாகப்பட்டினம், கொச்சின், தூத்துக்குடி ஆகிய 5 பெரிய துறைமுகங்களின் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவா்கள் பங்கேற்றனா்.

பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழுவதும் பெரிய துறைமுகங்கள் முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் செப். 24 ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com