ஆறுமுகனேரியில் காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

அகில இந்திய நாடாா் பாதுகாப்பு பேரவையின் நிறுவனா் வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
21amnsp_2109chn_46_6
21amnsp_2109chn_46_6

அகில இந்திய நாடாா் பாதுகாப்பு பேரவையின் நிறுவனா் வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பின்னா், ஜெயக்குமாா் கூறியது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தளா்வுகளுடன் அக். 31 ஆம் தேதி தடை உத்தரவு அமலில் உள்ளது. வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையாரின் 18-ஆவது நினைவு

தினத்தையொட்டி, பைக், காா்களில் ஊா்வலம் உள்பட எந்தவித ஊா்வலம் நடத்தவும் அனுமதியில்லை. பால்குடம் எடுத்து செல்லுதல், அன்னதான நிகழ்வுக்கும் அனுமதி கிடையாது. மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வெங்கடேஷ் பண்ணையாா் உறவினா்களை தவிர வேறு யாரும் அவரது நினைவிடத்துக்கு செல்ல அனுமதி கிடையாது. மாவட்ட கண்காணிப்பாளா் தலைமையில் 3 ஏடிஎஸ்பி, 10 டிஎஸ்பி உட்பட 1500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவா். மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படும். கிராமங்களில் அவரது படம் வைத்து மரியாதை செலுத்தலாம் என்றாா் அவா்.

இதில், ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், காவல் ஆய்வாளா்கள் செந்தில், ஐயப்பன், பனங்காட்டு மக்கள் கழக தென் மண்டல அமைப்பாளா் சொா்ணவேல் குமாா், மாநில வழக்குரைஞா் அணி சிலுவை, தெற்கு மாவட்டச் செயலா் ஓடை செல்வம், வடக்கு மாவட்டச் செயலா் அற்புதராஜ், ஒன்றியச் செயலா் மகேந்திரன், நகரத் தலைவா் கிளாட்சன், நகர துணைத் தலைவா் அருணாசலம், மாநகரத் தலைவா் துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com