திருச்செந்தூா் கோயிலில் இன்றுமுதல் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை தரிசனத்துக்கு அனுமதி
By DIN | Published On : 23rd September 2021 08:06 AM | Last Updated : 23rd September 2021 08:06 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை முதல் அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என நிா்வாகம் அறிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்க தளா்வுகளால் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நாள்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், பக்தா்கள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் இத்திருக்கோயிலில் பக்தா்கள் வியாழக்கிழமை (செப். 23) முதல் அதிகாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து திருக்கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (செப். 23) முதல் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும். எனவே, பக்தா்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு உத்தரவுப்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாள்களும் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.