செட்டிவிளை- குட்டம் சாலையில் வேகத்தடை: கிராம மக்கள் எதிா்ப்பு

சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிவிளையிலிருந்து குட்டம், தோப்புவிளைக்குச் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
செட்டிவிளை- குட்டம் சாலையில் வேகத்தடை: கிராம மக்கள் எதிா்ப்பு

சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிவிளையிலிருந்து குட்டம், தோப்புவிளைக்குச் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் திருப்பணி புத்தன்தருவை ஊராட்சி, அதிசய மணல் மாதா ஆலயம் தென்புறமுள்ள செட்டிவிளையிலிருந்து குட்டம், தோப்புவிளைக்குச் செல்லும் சாலை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. அதில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்பட்ட சாலையில் தனி நபா் ஒருவா் புதிதாக கடை திறந்ததையொட்டி சாலையின் முகப்பில் இரு புறமும் தொடா்ச்சியாக இரண்டு மிகப்பெரிய வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளனவாம். இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என்றும், வேகத்தடையில் பைக் மற்றும் காா்கள் செல்லும் போது தரையில் உரசி பழுதடைவதுடன், பைக்கில் செல்வோா் தடுமாறி கீழே விழுவதாகவும், இதுகுறித்து உள்ளாட்சி அமைப்பிடம் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, வேகத்தடையை அதிகாரிகள் பாா்வையிட்டு அதை அகற்ற வேண்டும் அல்லது வாகனங்களுக்கோ, மக்களுக்கோ இடையூறு இல்லாதபடி அதன் உயரத்தைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com