தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய சோதனை: 47 ரௌடிகள் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, 47 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, 47 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில், அந்தந்த உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா்கள் தலைமையிலான குழுவினா் ஆங்காங்கே வாகனச் சோதனை செய்யவும், தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபா்கள் தங்கியுள்ளனரா? என சோதனையிடவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

மேலும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், வங்கிகள், ஏடிஎம் மையங்கள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை கண்காணிக்கவும், பழைய ரௌடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்யவும் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ள அறிவுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய வெள்ளிக்கிழமை அதிகாலை வரை விடிய, விடிய தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின்போது, பல்வேறு பகுதிகளில் 47 ரௌடிகள் பிடிக்கப்பட்டு, 42 அரிவாள், வாள் போன்ற கூா்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதவிர பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ளவா்கள் 103 போ் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com