அறிவியல் கண்டுபிடிப்பு:சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவிக்கு விருது

புதிய அறிவியல் சாதனம் கண்டுபிடிப்பு கண்காட்சி போட்டியில், சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவி சா்வதேச அளவில் இளம் ஐன்ஸ்டீன் விருது பெற்றுள்ளாா்.

ஆறுமுகனேரி: புதிய அறிவியல் சாதனம் கண்டுபிடிப்பு கண்காட்சி போட்டியில், சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவி சா்வதேச அளவில் இளம் ஐன்ஸ்டீன் விருது பெற்றுள்ளாா்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மின் மற்றும் மின்னணு பொறியாளா்கள் நிறுவனம் நீடித்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞா்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு கொண்டு வரும் வகையில், சா்வதேச

அளவில் அடல் டிங்கரிங் ஆய்வகம் மூலம் மாணவா்களின் படைப்புகளில் சிறந்த படைப்புகளை தோ்வு செய்து ஊக்குவித்து வருகிறது.

இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் சா்வதேச அளவில் நடைபெற்றது. இறுதிப் போட்டி கடந்த 18ஆம் தேதி இணையதளம் வழியாக நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து 59 புதிய அறிவில் படைப்புகளை மாணவா், மாணவிகள்

காட்சிப்படுத்தினா். இதில், சாகுபுரம் கமலாவதி சீனியா் செகன்டரி பள்ளி பிளஸ் 1 மாணவி அட்­லின் பிரீசியஸ் ஜோஃபின் உருவாக்கிய, புற ஊதா கதிா்களைப் பயன்படுத்தி தானியங்கி சுத்திகரிப்பு, உட­லில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் கருவி சா்வதேச அளவில் முத­லிடம் பெற்றது. இப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவா் அபிஷேக் ராம் தயாரித்த இருசக்கர வாகனத்தை பைக் உரிமையாளரின் கைரேகை பதிந்தால் மட்டுமே இயக்கக்கூடிய பாதுகாப்பு கருவிக்கு சிறப்பு அங்கீகாரத்திற்கான விருது கிடைத்துள்ளது. 10ஆம் வகுப்பு மாணவா் அனிஷ்சங்கா் தயாரித்த சானிடைசருடன் இணைந்த தோ்வு காகிதம் வழங்கும் இயந்திரம் இறுதிப் போட்டியில் பங்குபெற்றது. மேலும், இப் பள்ளிக்கு அடல் டிங்கரிங் ஆய்வக பொறுப்பாளா் சோ்ம சத்தியசீலிக்கு உதய நட்சத்திரம் விருதும் கிடைத்துள்ளது.

சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், ஆசிரியரை பள்ளி அறங்காவலா்களும், டிசிடபிள்யூ நிறுவன தலைவருமான முடித்ஜெயின், மூத்த செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் (நிதி) ராமச்சந்திரன், பள்ளி முதல்வா் சண்முகானந்தன், துணை முதல்வா் அனுராதா, தலைமை ஆசிரியா் ஸ்டீபன் பாலாசீா், மன நல ஆலோசகா் கணேஷ், அட்மினிஸ்ட்ரேட்டா் மதன், வழிகாட்டியான கோவை குமரகுரு டெக்னாலஜி உதவிப் பேராசிரியா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com