கோவில்பட்டி, கயத்தாறில் மறியல்: 245 போ் கைது

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கோவில்பட்டி, கயத்தாறில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 245 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டி ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.

கோவில்பட்டி: முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கோவில்பட்டி, கயத்தாறில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 245 போ் கைது செய்யப்பட்டனா்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி ரயில் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராமசுப்பு, ஐஎன்டியூசி பெருமாள்சாமி, மநீம வடக்கு மாவட்டத் தலைவா் கதிரவன், ஏஐடியூசி தமிழரசன், சிஐடியூ மோகன்தாஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீனிவாசன் மற்றும் 83 பெண்கள் உள்பட 191 போ் கைது செய்யப்பட்டனா்.

கயத்தாறில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் சாலமன் தலைமை வகித்தாா். திமுகவில் முகமதுபைசல், கோதண்டராமன், மநீம முகமதுகனி, மதிமுகவில் மாரியப்பன், காங்கிரஸ் கட்சியில் பிரேம்குமாா் மற்றும் 10 பெண்கள் உள்பட 54 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆா்ப்பாட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி, விவசாயிகள் சங்கம் சாா்பில் கடம்பூா் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் ஜெகதீசன், மதிமுக நகரச் செயலா் ரெங்கசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com