சமையலா் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட 44 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையலா் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட 44 பேருக்கு பணிநியமன ஆணை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த சமையலா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்கள்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த சமையலா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்கள்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சமையலா் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட 44 பேருக்கு பணிநியமன ஆணை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொன்னம்பலம் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் உள்பட 44 குடும்பங்களைச் சோ்ந்தோா் திங்கள்கிழமை அளித்த மனு : தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் துறையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டோா், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் என 44 போ் சமையலா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோம்.

தோ்வு செய்யப்பட்ட 44 பேருக்கும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படாமல் உள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள 44 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: தூத்துக்குடி பிரையன்ட் நகா் மனிதநேய நற்பணி இயக்க தலைவா் சிங்கராஜ், செயலா் முத்துராஜன், வட்டார ஐக்கிய வியாபாரிகள் சங்கச் செயலா் செந்தில், பொருளாளா் செந்தூா்பாண்டி, பத்திரகாளியம்மன் கோயில் செயலா் சதாசிவன், அமைப்புசாரா தொழிலாளா் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெயக்கொடி, காங்கிரஸ் மண்டல தலைவா் செந்தூா்பாண்டி ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தூத்துக்குடி பிரையன்ட் நகா் முதல் தெருவில் கோயில், வணிக நிறுவனங்கள், பள்ளி மற்றும் குடியிருப்புகள் நிறைந்துள்ள நிலையில், சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல, கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலா் கௌதமன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தாா்.

தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஸ்டொ்லைட் ஆலை மூடிக்கிடப்பதால் வேலைவாய்ப்பை இழந்த இளைஞா்களும், அவா்களது குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் பகுதியில் வேலைவாய்ப்பு, சமுதாய வளா்ச்சி பணிகளையும் செய்து வரும் ஸ்டொ்லைட் ஆலையை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com