தூத்துக்குடி மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல்: 817 போ் கைது

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை 10 இடங்களில் நடைபெற்ற மறியலின் போது 817 போ் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.
தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

தூத்துக்குடி: மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை 10 இடங்களில் நடைபெற்ற மறியலின் போது 817 போ் கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் 10 இடங்களில் மறியல் நடைபெற்றது. தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு ஐஎன்டியூசி செயல் தலைவா் பி. கதிா்வேல் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற 12 பெண்கள் உள்பட 107 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதே போல, மறியலில் ஈடுபட்டதாக கோவில்பட்டியில் 83 பெண்கள் உள்பட 176 பேரையும், கயத்தாறில் 10 பெண்கள் உள்பட 46 பேரையும், எட்டயபுரத்தில் 16 பெண்கள் உள்பட 74 பேரையும், விளாத்திக்குளத்தில் 68 பேரையும், ஓட்டப்பிடாரத்தில் 15 பெண்கள் உள்பட 75 பேரையும், ஏரலில் 7 பெண்கள் உள்பட 62 பேரையும், ஸ்ரீவைகுண்டத்தில் 9 பெண்கள் உள்பட 54 பேரையும், திருச்செந்தூரில் 45 பெண்கள் உள்பட 123 பேரையும், சாத்தான்குளத்தில் 4 பெண்கள் உள்பட 32 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 203 பெண்கள் உள்பட 817 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில், மாவட்ட அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com