‘பெட்டிக் கடைகளில் மது அருந்தஅனுமதித்தால் கடும் நடவடிக்கை’

தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்டிக் கடைகளில் மது அருந்த அனுமதித்தால் கடை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளா் ஐயப்பன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்டிக் கடைகளில் மது அருந்த அனுமதித்தால் கடை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளா் ஐயப்பன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்ற மதுக் கடைகளுடன்

இணைந்த மதுக் கூடங்கள் அனைத்தும் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மதுக் கடைகளுக்கு அருகில் அனுமதி இல்லாத மதுக்கூடம், பெட்டிக் கடைகளில் மது அருந்த அனுமதிப்பது தெரியவந்தால் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு அருகே அனுமதியற்ற மதுக்கூடங்கள் இயங்கி வருவதை கண்டறிவதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு அருகேயுள்ள சில்லறை விற்பனை கடைகளில் தண்ணீா், தின் பண்டங்கள்

உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்வது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டதில் விதியை மீறியதாக 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுக் கடை அருகில் இதுபோன்ற விற்பனைகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com