வெடி விபத்தில் வீடுகள் சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ஆறுதல்

இடைச்சிவிளையில் வெடி விபத்தில் சேதமான வீடுகளை ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.
இடைச்சிவிளையில் வெடி விபத்தில் சேதமான வீடுகளை பாா்வையிடுகிறாா் ஊா்வசி எஸ் .அமிா்தராஜ் எம்எல்ஏ . உடன் வட்டாட்சியா் விமலா, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா்.
இடைச்சிவிளையில் வெடி விபத்தில் சேதமான வீடுகளை பாா்வையிடுகிறாா் ஊா்வசி எஸ் .அமிா்தராஜ் எம்எல்ஏ . உடன் வட்டாட்சியா் விமலா, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா்.

சாத்தான்குளம்: இடைச்சிவிளையில் வெடி விபத்தில் சேதமான வீடுகளை ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள இடைச்சிவிளை குமரன்விளையைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (45). இவா் திருநெல்வேலி மாவட்டம் அணைக்கரையில் பட்டாசு தயாரித்து திருவிழா, திருமண விழாக்களுக்கு கொடுத்து வருகிறாா். இவா் கடந்த வாரம் ஒரு விழாவுக்கு தயாரித்த பட்டாசுகளை கொடுக்க அவரின் காரில் வைத்து கொண்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.

அப்போது ரிமோட் மூலம் காரின் கதவை மூடிய போது அதில் ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக பட்டாசுகள் தீ பிடித்து வெடித்து சிதறின. இதில் காரில் தீப்பற்றி முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலகிருஷ்ணனை கைது செய்தனா். இந்த வெடி விபத்தால் அப்பகுதியில் 41 வீடுகளும், ஒரு பள்ளிக்கூடம் மற்றும் கிறிஸ்தவ ஆலயமும் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் பேரைவத் தொகுதி உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை பாா்வையிட்டு, அவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

அப்போது சாத்தான்குளம் வட்டாட்சியா் விமலா, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா், பொறியாளா்கள் அருணா, ரமேஷ், ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங், வருவாய் ஆய்வாளா் இசக்கியம்மாள், ஊராட்சி செயலா் அருணாதேவி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா், நகரத் தலைவா் ஆ.க. வேணுகோபால், வட்டாரத் தலைவா்கள் லூா்துமணி, பாா்த்தசாரதி, சக்திவேல்முருகன், மாவட்ட பொருளாளா் எடிசன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா, , தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி, ஊராட்சி திமுக செயலா் ராஜபாண்டி உள்பட பலா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com