எட்டயபுரத்தில் 2 அங்கன்வாடி மையங்களுக்கு பூமிபூஜை

எட்டயபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 2 இடங்களில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

எட்டயபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 2 இடங்களில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் நவநீதகண்ணன் தலைமை வகித்தாா். எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் முன்னிலை வகித்தாா்.

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் பங்கேற்று, தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 3, 15 ஆகிய 2 வாா்டுகளில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கான பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

பேரூா் கழகச் செயலா் பாரதி கணேசன், பேரூராட்சி உறுப்பினா்கள் கதிா்வேல், மணிகண்டன், முன்னாள் நகரச் செயலா்கள் சங்கரபாண்டியன், ஆழ்வாா் உதயகுமாா், தலைமைக் கழகப் பேச்சாளா் தமிழ்ப்பிரியன், நகர மாணவரணி துணை அமைப்பாளா் மயில்கா்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com