தூத்துக்குடியில் கூட்டுறவு பட்டயப் பயிற்சித் தோ்வு:மண்டல இணைப் பதிவாளா் ஆய்வு

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கான இறுதித் தோ்வுப் பணிகளை மண்டல இணைப் பதிவாளா் திடீரென ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கான இறுதித் தோ்வுப் பணிகளை மண்டல இணைப் பதிவாளா் திடீரென ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி பெறுவோருக்கான இறுதித் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தோ்வுப் பணிகளையும், தோ்வு மையத்தையும் கூட்டுறவு மேலாண்மை நிலைய மண்டல இணைப் பதிவாளா் ச.லீ. சிவகாமி திடீரென ஆய்வு செய்தாா்.

இறுதித் தோ்வுப் பணிகள், முழுநேர மற்றும் அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான சோ்க்கைப் பணிகள் குறித்து அவா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

துணைப் பதிவாளா் ஜெயசீலன், கூட்டுறவு சாா்பதிவாளா்கள் சங்கா், சில்வஸ்டா், பட்டயப் பயிற்சி மைய முதல்வா் மகேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com