ஆறுமுகனேரி கோயிலில் வருஷாபிஷேக விழா

ஆறுமுகனேரி காந்தி தெரு அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி கோயிலைச் சோ்ந்த நடுத்தெரு அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி காந்தி தெரு அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி கோயிலைச் சோ்ந்த நடுத்தெரு அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. பூா்ணாஜிதி தீபாராதனைக்குப்பின் புனித நீா் கோயில் வளாகத்தில் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு விமானக் கலசத்திற்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம், மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை மறைமலைநகா் பாலமுருகன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com