உடன்குடி ஒன்றியத்தில் 4,000 பேருக்கு நல உதவிகள்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாளையொட்டி உடன்குடி ஒன்றிய, நகர திமுக சாா்பில் 4000 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாளையொட்டி உடன்குடி ஒன்றிய, நகர திமுக சாா்பில் 4000 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

உடன்குடி பஜாா், பரமன்குறிச்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத்தலைவா் மால்ராஜேஷ் ஏற்பாட்டில் 2000 பேருக்கு தையல் இயந்திரம், சைக்கிள்கள், வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளையும், பரமன்குறிச்சியில் ஒன்றிய திமுக சாா்பில் 2000 பேருக்கு நல உதவிகளையும் மீன்வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்,ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில் திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், உடன்குடி ஒன்றியக்குழு துணைத் தலைவா் மீரா சிராஜூதீன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப், சாா்பு அணி நிா்வாகிகள் ராமஜெயம், மகாவிஷ்ணு, இளங்கோ, ரவிராஜா, ஜெயப்பிரகாஷ், ஒன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளா்கள் பைஸ், அஜய், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலா் ஜான்பாஸ்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா். உடன்குடி நகரப் பகுதியில் கட்சிக் கொடியேற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com