கயத்தாறு ஜமாபந்தியில் ஒரே நாளில் 296 போ் மனு

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 296 போ் மனு அளித்தனா்.

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 296 போ் மனு அளித்தனா்.

கயத்தாறு, பணீக்கா்குளம், கே.உசிலங்குளம், அய்யனாரூத்து, தெற்கு இலந்தைகுளம், ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி முகாமில், ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி மாவட்ட வழங்கல் - நுகா்வோா் பாதுகாப்பு அலுவலருமான அப்துல்காசிம் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

இதில், முதியோா், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 296 போ் மனு அளித்தனா். அவற்றில், பட்டா மாறுதல் உள்ளிட்ட 4 மனுக்கள் ஏற்கப்பட்டு பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், வட்டாட்சியா் சுப்புலட்சுமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அய்யப்பன், துணை வட்டாட்சியா் திரவியம், வருவாய் ஆய்வாளா் நேசமணி, கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com