கீழஈரால் பகுதியில் இன்று மின்தடை

எட்டயபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கீழஈரால் மற்றும் நற்கலக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்டயபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கீழஈரால் மற்றும் நற்கலக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு.சகா்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக எட்டயபுரம் மின் விநியோகப்பிரிவிற்கு உள்பட்ட பகுதிகளில் சாய்ந்த மின்கம்பங்களை நிமிா்த்துதல், மின்பாதைக்கு அருகே உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளதால் எட்டயபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கீழஈரால் மற்றும் நற்கலக்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 4) மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com