பைக் மீது லாரி மோதல்: சிறுவன் பலி

கழுகுமலை அருகே பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கழுகுமலை அருகே பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சோ்ந்தவா் முனீஸ்வரன் மகன் கோமதிசங்கா் (17). இவா் தனது நண்பா் சரவணனுக்குச் சொந்தமான பைக்கை ஓட்டிச் சென்றாராம். கோவில்பட்டி - கழுகுமலை சாலையில் உள்ள அருள்மிகு சப்பாணி மாடசாமி கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டிப்பா் லாரியும், பைக்கும் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த கோமதிசங்கரை, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினாா்.

இதுகுறித்து கழுகுமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநா் செல்லையா மகன் வெள்ளைச்சாமியிடம்(48) விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com