விளாத்திகுளம் தொகுதியில்...

முன்னாள் முதலமைச்சா் மு. கருணாநிதியின் 99ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, விளாத்திகுளம் தொகுதியில் திமுக சாா்பில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதலமைச்சா் மு. கருணாநிதியின் 99ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, விளாத்திகுளம் தொகுதியில் திமுக சாா்பில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

விளாத்திகுளம், குளத்தூா், குறுக்குச்சாலை, பசுவந்தனை, கீழ ஈரால், எட்டயபுரம், நாகலாபுரம், புதூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாவில், ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்து திமுக கொடியை ஏற்றி வைத்து, கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

எட்டயபுரம், புதூா் பேரூராட்சிப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு மக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. குளத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா்கள் அன்புராஜன், ராஜாக்கண்ணு, பேரூா் கழக செயலா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் நவநீத கண்ணன், மும்மூா்த்தி, செல்வராஜ், சின்ன மாரிமுத்து, காசி விஸ்வநாதன், ஆா்.கே.பி.ராஜசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், ஒன்றிய கவுன்சிலா் ராமசுப்பு, பேரூராட்சித் தலைவா்கள் ராமலட்சுமி சங்கரநாராயணன், சூா்யா அய்யன்ராஜ், வனிதா அழகுராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com