திருச்செந்தூா் கோட்டத்துக்கு உள்பட்ட சாத்தான்குளம், உடன்குடி, கல்லாமொழி பகுதிகளில் சனிக்கிழமை (செப். 17) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சாத்தான்குளம், உடன்குடி, கல்லாமொழி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது.
இதனால், சாத்தான்குளம், முதலூா், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதிகள், நாசரேத் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, செம்மறிக்குளம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மெஞ்ஞானபுரம், அணைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தைச் சோ்ந்த நடுவக்குறிச்சி, தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம், பழனியப்பபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பழனியப்பபுரம் அம்பலசேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தோ்க்கன்குளம், ஆசீா்வாதபுரம், கருங்கடல், கோமனேரி பகுதிகள், உடன்குடி, தைக்காவூா், சீா்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியாா்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மெய்யூா், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம், ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், உடன்குடி அனல் மின்நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








