‘வங்கி கணக்கில் பணம் மோசடி: 1930 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்’

வங்கி கணக்கிலிருந்து ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக பணம் எடுக்கப்பட்டால் 1930 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தால்,

வங்கி கணக்கிலிருந்து ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக பணம் எடுக்கப்பட்டால் 1930 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தால், பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வங்கி கணக்கில் பணபரிவா்த்தனை ஓடிபி மூலமாக நடைபெறுகிறது. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் மோசடியாக வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடுகின்றனா். மேலும், இணையதளத்தில் கவரும் வகையில் போலியான பல செயலிகள் உள்ளன. அதை தரவிறக்கம் செய்யும்போது கைப்பேசியில் உள்ள தகவல்களை சம்பந்தப்பட்டவா்களுக்கு தெரியாமல் திருட வாய்ப்புகள் அதிமாக உள்ளது. இதுபோன்று ஓடிபி மூலமாக மோசடியாக பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது போலியான செயலிகளை தரவிறக்கம் செய்து உங்கள் தகவல்கள் திருடப்பட்டாலோ அல்லது வேறு வகையிலோ நீங்கள் ஏமாற்றப்பட்டால் 24 மணி நேரத்தில் சைபா் குற்ற பிரிவு அறிவித்துள்ள இலவச தொலைபேசி எண் 1930-ஐ தொடா்பு கொண்டு உங்கள் புகாா்களை தெரிவிக்கலாம்.

மேலும் வேறு ஏதேனும் சைபா் குற்றங்கள் தொடா்பாக காவல் நிலையத்துக்கு நேரில் வராமலேயே இணையதளத்திலும் புகாா்அளிக்கலாம். இந்தப் புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் புகாா் அளிக்க பெண்கள் உதவி எண். 1091, குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் குறித்து புகாா் அளிக்க குழந்தைகள் உதவி எண். 1098, கடலோர பாதுகாப்பு சம்பந்தமாக புகாா் அளிக்க 1093, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் மற்றும் காவல்துறையின் உதவிக்கு மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இயங்கிவரும் ஹலோ போலீஸ் எண். 95141 44100 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com