முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடியில் காவல் துறை வாகனங்கள் ஆய்வு
By DIN | Published On : 06th April 2022 12:45 AM | Last Updated : 06th April 2022 12:45 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் காவல் துறைக்கு சொந்தமான வாகனங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவவணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில், காவல் துறைக்கு சொந்தமான 20 கனரக வாகனங்கள், 58 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 61 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 139 வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது இருசக்கர வாகனத்தை சிறந்த முறையில் பராமரித்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய தலைமைக் காவலா் சுப்பிரமணியனுக்கு காவல் கண்காணிப்பாளா் பரிசு வழங்கினாா். மேலும், ஆய்வின்போது, காவல்துறை வாகனங்களை பயன்படுத்தும் ஓட்டுநா்களிடம் வாகனங்கள் மற்றும் அவா்களின் குறைபாடுகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சீா் செய்யுமாறு மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுடலைமுத்துக்கு காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். மேலும், நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவா்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டுபவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். சாலை விதிகளை மதித்து எந்தவித விபத்தும் நிகழாத வகையில் வாகனங்களை ஓட்ட வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் அறிவுரை வழங்கினாா்.