மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடன்குடி கிறிஸ்தியாநகரம் நவஜீவன் இல்ல மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடன்குடி கிறிஸ்தியாநகரம் நவஜீவன் இல்ல மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

உடன்குடி கிறிஸ்தியாநகரம் நவஜீவன் இல்லத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கி படித்து வருகின்றனா். அவா்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்களை தொழிலதிபா் ஆா்.ஆனந்த மகேஷ்வரன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங், நகரச் செயலா் ஜான்பாஸ்கா், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவா் அஸ்ஸாப் அலி பாதுஷா, மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ராமஜெயம், மகாவிஷ்ணு,சிராஜூதீன், அலாவுதீன்,திருச்செந்தூா் நகா்மன்றத் துணைத் தலைவா் ரமேஷ், நகரச் செயலா் சுடலை, உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சலீம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com