புகையிலைப் பொருள்கள்விற்பனையைத் தவிா்க்க வேண்டும்: வியாபாரிகளுக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்ட கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிா்க்க வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன்.

தூத்துக்குடி மாவட்ட கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிா்க்க வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய அளவிலான பெட்டி கடைகள் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில், தூத்துக்குடி அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை தடுப்பதற்காக தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளின் அருகில் இதுபோன்ற போதை பொருள்களை விற்பனை செய்யப்படுவது முழுமையாக கட்டுபடுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்வதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் அந்தக் கடைக்கு சீல் வைக்கப்படுவதுடன் குற்றவியல் வழக்கும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வியாபாரிகள் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ், தூத்துக்குடி வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் சோலையப்பராஜா, செயலா் மகேஸ்வரன், தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்கச் செயலா் பாஸ்கா், பொருளாளா் ஆறுமுகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com