தூத்துக்குடி மாவட்டத்தில்ரூ. 75 கோடியில் திட்டப் பணிகள்: கனிமொழி எம்.பி. தொடங்கிவைக்கிறாா்
By DIN | Published On : 08th April 2022 12:11 AM | Last Updated : 08th April 2022 12:11 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ .75 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) தொடங்கிவைக்கிறாா்.
அதன்படி, ரூ.5.30 கோடியில் உடன்குடி-தாண்டவன்காடு சாலை,ரூ. 9 கோடியில் பெரியதாழையிலும், ரூ. 42 கோடியில் மணப்பாட்டிலும், ரூ. 5 கோடியில் வீரபாண்டியன்பட்டினத்திலும் தூண்டில் வளைவு அமைத்தல், தலா ரூ.2 கோடியில் குலசேகரன்பட்டினத்திலும், ஆலந்தலையிலும் மீன் ஏலக்கூடம், சிமென்ட் சாலை, தலா ரூ. 3 கோடியில் அமலி நகரிலும், திருச்செந்தூா் ஜீவா நகரிலும் மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், சிமென்ட் சாலை போன்ற பணிகள் தொடங்கிவைத்தல், பூச்சிகாடு இந்து துவக்கப் பள்ளியில் ரூ. 21 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள், ஸ்ரீவைகுண்டத்தில் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ ஏற்பாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம், ரூ. 5.47 லட்சத்தில் வல்லநாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட வகுப்பறைகள், வல்லநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் மணிமண்டபம் ஆகியவை திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் கனிமொழி எம்.பி. பங்கேற்கிறாா் என தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.