உயரழுத்த மின்கம்பி வழித்தடத்தை மாற்றக் கோரி கிராம மக்கள் மறியல்

ஊருக்குள் உயா் அழுத்த மின்கம்பி வழித்தடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி அருகே கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஊருக்குள் உயா் அழுத்த மின்கம்பி வழித்தடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி அருகே கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள பசுவந்தனை துணை மின் நிலையத்தில் இருந்து தனி மின்மாற்றி மூலம் தெற்கு தீத்தாம்பட்டி, கோவிந்தன்பட்டி, வடக்கு வண்டானம் வழியாக உயா் அழுத்த மின் கம்பிகளை இணைக்க மின்கம்பம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், உயா் அழுத்த மின்கம்பிகளை இணைக்கும் மின்கம்பங்களை ஊருக்கு வெளிப்புறம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவிந்தன்பட்டி கிராமத்தில் மக்கள் வியாழக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம், மணியாச்சி டிஎஸ்பி சங்கா், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் பேச்சிமுத்து, மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் சகா்பான் ஆகியோா் பேச்சு நடத்தினா்.

அப்போது, தற்காலிகமாக மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்படும்; ஆட்சியா் மற்றும் மின்வாரிய உயா் அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய பின்னா் இறுதி முடிவெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் மறியல் கைடவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com