அமமுக நிா்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமமுக நிா்வாகிகள் கூட்டம் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமமுக நிா்வாகிகள் கூட்டம் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமமுக செயலா் சிவபெருமாள் தலைமை வகித்தாா். தென்மண்டல பொறுப்பாளரும், கயத்தாறு ஒன்றியக்குழுத் தலைவருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தலைமை விருந்தினராகப் பங்கேற்றாா். தலைமை நிலையச் செயலா் சண்முகவேல், செயலா் டேவிட் அண்ணாத்துரை ஆகியோா் சிறப்புரையாற்றினா். கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், மாநில எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் பூலோகபாண்டியன், பொதுக்குழு உறுப்பினா் அமிா்தராஜ்பாண்டியன், பொருளாளா் என்.எல்.எஸ்.செல்வம், கயத்தாறு மேற்கு ஒன்றியச் செயலா் கணபதிபாண்டியன், கோவில்பட்டி நகரச் செயலா் காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com