செண்பகவல்லி அம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்
By DIN | Published On : 13th April 2022 12:29 AM | Last Updated : 13th April 2022 12:29 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.
இக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாள்களில் தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, , காலை, இரவு வேலைகளில் சுவாமி, அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் நாளான புதன்கிழமை (ஏப். 13) காலை 9.30 மணிக்கு மேல் கம்மவாா் சங்கம் சாா்பில் தேரோட்டம் நடைபெறுகிறது.
இதில், கம்மவாா் சங்கத் தலைவா் வெங்கடேசன் சென்னக்கேசவன், அமைச்சா்கள் சேகா்பாபு, பெ.கீதாஜீவன், தூத்துக்குடி எம்பி கனிமொழி, கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ, மதிமுக தலைமை நிலையச் செயலா் துரை வைகோ உள்பட பலா் பங்கேற்கின்றனா்.