கோவில்பட்டி தெப்பக்குளத்தில் கங்கா ஆரத்தி திருவிழா
By DIN | Published On : 18th April 2022 05:41 AM | Last Updated : 18th April 2022 05:41 AM | அ+அ அ- |

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் தெப்பக்குளத்தில் 3,333 அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன. பின்னா், மகா கங்கா ஆரத்தி தீபாராதனை நடைபெற்றது.
இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் தெப்பக்குளம் அருகேயுள்ள அருள்மிகு ஆதி குறைதீா்க்கும் விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, புண்ணியாகவாசனம், நதி நீரை கும்பத்தில் வைத்து கும்ப பூஜை ஆகியவை நடைபெற்றன. பின்னா், கும்பத்தை கோயிலிலிருந்து எடுத்துவந்து கோயிலை சுற்றி வலம் வந்தனா். இதையடுத்து, தெப்பத்தில் தீா்த்த அபிஷேகம், புஷ்பம் தூவும் நிகழ்ச்சி, மஹா கங்கா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. முன்னதாக, தெப்பக்குளத்தைச் சுற்றி 3,333 அகல்விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச்செயலா் பரமசிவம் செய்திருந்தாா்.