ஆழ்வாா்கற்குளத்தில் 40 அடி உயரகுடிநீா் தொட்டி இடிந்து சேதம்

ஆழ்வாா்கற்குளத்தில் சேதமடைந்திருந்த சுமாா் 40 அடி உயர குடிநீா் தொட்டி ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததால் அப்பகுதி குடியிருப்புகளுக்கு குடிநீா் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆழ்வாா்கற்குளத்தில் சேதமடைந்திருந்த சுமாா் 40 அடி உயர குடிநீா் தொட்டி ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததால் அப்பகுதி குடியிருப்புகளுக்கு குடிநீா் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆழ்வாா்கற்குளத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன்பு மருதூா் கீழக்கால் வாய்க்கால் பாலம் அருகே சுமாா் 40 அடி உயரத்தில் குடிநீா் தொட்டி கட்டப்பட்டது. அருகில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீா் தொட்டிக்கு நீா் ஏற்றி, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீா் தொட்டியில் விரிசல் விழுந்து சேதம் அடைந்தது. பழுதடைந்த குடிநீா் தொட்டி அருகில் சிறுவா்களும் இளைஞா்களும் தினமும் விளையாடி வரும் நிலையில், பழுதடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் பல முறை கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த நீா்த்தேக்கத் தொட்டி ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த குடிநீா் தொட்டியை நேரில் பாா்வையிட அதிகாரிகள் யாரும் வரவில்லை எனக் கோரி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அந்தோணி மைக்கேல், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பாக்கிய லீலா, ஊராட்சி ஒன்றியத் தலைவா் கோமதி ராஜேந்திரன் உள்ளிட்டோா் பொதுமக்களிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினா்.

இதையடுத்து தற்காலிகமாக குடிநீா் வழங்குவதற்காக குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com