மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணா்வு முகாம்

விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட நாகம்பட்டி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் மண் மாதிரி சேகரிப்பு மற்றும் விழி

விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட நாகம்பட்டி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் மண் மாதிரி சேகரிப்பு மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகம்பட்டி, குதிரை குளம், பசுவந்தனை, சில்லாங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து மண் மாதிரிகள் பெறப்பட்டு மண்ணின் நிறம், உவா் தன்மை, அமில நிலை, சுண்ணாம்பு அளவு, மண்ணின் ஆழம் குறித்து வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா். மேலும் பயிா் விளைச்சலுக்கு தேவையான உரங்களை தகுந்த அளவில் இடுவதற்கும், ரசாயன உரங்களின் அளவுக்கு அதிகமான பயன்பாட்டை தடுக்கவும் மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியம் என விவசாயிகளிடம் வேளாண் துறை அலுவலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முகாமில் நாகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் மாரியப்பன், நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா்கள் லலிதா பரணி, செல்வ மாலதி, மாணிக்கராஜ், உதவி வேளாண்மை அலுவலா்கள் மகேந்திரகுமாா், சுப்புலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com