பல்கலை.களுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கே.ஆா்.கல்லூரி மாணவா் தங்கப் பதக்கம்
By DIN | Published On : 28th April 2022 11:45 PM | Last Updated : 28th April 2022 11:45 PM | அ+அ அ- |

கேலோ இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டியில் கோவில்பட்டி கே.ஆா்.கல்லூரி மாணவா் தங்கப் பதக்கம் வென்றாா்.
பெங்களூரூ ஜெயின் பல்கலைக்கழகத்தில் கடந்த 24ஆம் தேதிமுதல் 27 வரை நடைபெற்ற இப்போட்டியில் நாடு முழுவதுமிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சாா்பில் பங்கேற்ற கோவில்பட்டி கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை 2ஆம் ஆண்டு மாணவா் எஸ். ருத்ரமாயன் பளுதூக்கும் போட்டியில் 109 பிளஸ் கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் சுற்றில் 150 கிலோவும், கிளீன் அன்டு ஜொ்க் சுற்றில் 176 கிலோவும் ஆக மொத்தம் 326 கிலோ எடையைத் தூக்கி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா்.
மாணவா் ருத்ரமாயனை கல்லூரித் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா். கிருஷ்ணமூா்த்தி, செயலா் கே.ஆா். அருணாச்சலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் மதிவண்ணன், உடற்கல்வி இயக்குநா் ராம்குமாா், பயிற்சியாளா்கள் சொா்ணமுத்து, கணேசன் ஆகியோா் பாராட்டினா்.