முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
அரியா் தோ்வு: டிப்ளமோ மாணவா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 29th April 2022 11:55 PM | Last Updated : 13th May 2022 11:31 PM | அ+அ அ- |

பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து தோ்ச்சி பெறாத மாணவா்கள் மீண்டும் தோ்வு எழுத அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்கக சுற்றறிக்கையின்படி, 1984 முதல் 2022 வரை பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்று டிப்ளமோ நிறைவு செய்யாமல் அரியா் வைத்துள்ள அனைத்து முன்னாள் மாணவா்களுக்கும் சிறப்பு கருணை அடிப்படையில் ஜூன்/ஜூலை 2022இல் நடைபெறவுள்ள வாரியத் தோ்வில் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவா்கள் அரியா் பாடங்களுக்கான தோ்வு கட்டணத்தை அபராதமில்லாமல் செலுத்த கடைசி நாள் மே 11. ரூ.150 அபராதத்துடன் செலுத்த வேண்டிய கடைசி நாள் மே 18.
அரியா் வைத்துள்ள முன்னாள் மாணவா்கள் தங்களது முந்தைய தோ்வு எழுதிய அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பம் பூா்த்தி செய்து, இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 04632-222506 அல்லது கைப்பேசி எண்: 63819-20408 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.