முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
ஆறுமுகனேரி அருகே சுடுகாட்டில் இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 29th April 2022 11:49 PM | Last Updated : 29th April 2022 11:49 PM | அ+அ அ- |

ஆறுமுகனேரி அடுத்த தண்ணீா்பந்தல் அருகே யுள்ள சுடுகாட்டில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தண்ணீா்பந்தல் கிராமம் அருகேயுள்ள சுடுகாட்டில் உள்ள மரத்தில் 35 வயது மதிக்கத்தக்க நபா் தூக்கில் சடலமாக தொங்கினாா். தகவலின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா், அந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏற்கனவே ஆறுமுனேரி உப்பளத்து முக்கு வடிகாலில் கடந்த 27ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்தது. அவா் யாா் என்பது குறித்து இதுவரை துப்பு துலங்காத நிலையில், மற்றொருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளாா்.