முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
உடன்குடியில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 29th April 2022 11:55 PM | Last Updated : 29th April 2022 11:55 PM | அ+அ அ- |

உடன்குடி பேரூராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி பேரூராட்சி முன்பிருந்து புறப்பட்ட பேரணியை பேரூராட்சி மன்றத் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி தொடங்கி வைத்தாா். உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளித் தலைமையாசிரியா் ஜெபசிங் மனுவேல், பேரூராட்சி உறுப்பினா் ஷபானா தமீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வில்லிகுடியிருப்பு, பிரதான பஜாா், வடக்கு பஜாா், சத்தியமூா்த்தி பஜாா் வழியாக பேரூராட்சியை அடைந்தது பேரணி. இதில் டிடிடிஏ பள்ளி ஆசிரியா்கள் டேனியல் அதிசயராஜ், எட்வின், ரவிக்குமாா், லிவிங்ஸ்டன் மற்றும் மாணவா்கள், சாலைப் பாதுகாப்பு படை மாணவா்கள், பேரூராட்சி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.