முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
சீா்மிகு நகரம் திட்டப் பணிகள்: ஒருநபா் ஆணைய தலைவா் ஆய்வு
By DIN | Published On : 29th April 2022 11:55 PM | Last Updated : 29th April 2022 11:55 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீா்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஒருநபா் ஆணைய தலைவா் டேவிதாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலைகள், தெருவிளக்குகள், குடிநீா் விநியோகம், பூங்கா மேம்பாடு, பக்கிள் ஓடை அபிவிருத்தி, பேருந்து நிலைய அபிவிருத்தி பணிகள், மழைநீா் வடிகால், புதை சாக்கடை திட்ட பணிகள் உள்ளிட்ட 84 வகையான பணிகளை இரண்டு நாள்களாக டேவிதாா் ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட டேவிதாா், பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்தாா்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, செயற்பொறியாளா் ரூபன் சுரேஷ் பொன்னையா, நகா்நல அலுவலா் அருண்குமாா், உதவி செயற்பொறியாளா் சரவணன், உதவி ஆணையா் சந்திரமோகன் மற்றும் அலுவலா்கள், திட்ட கண்காணிப்பு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.