முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
திருச்செந்தூரில் மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 29th April 2022 11:54 PM | Last Updated : 29th April 2022 11:54 PM | அ+அ அ- |

திருச்செந்தூா் நகராட்சி சாா்பில் மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சள் பையை பொதுமக்கள் பயன்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் வேலவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், சுகாதார மேற்பாா்வையாளா் வெற்றிவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி பொதுமக்களுக்கு மஞ்சள் பையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் கண்ணன், முத்துகிருஷ்ணன், கிருஷ்ணவேணி, தி.மு.க. நகர பொறுப்பாளா் வாள் சுடலை, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் ராஜபாண்டி, தோப்பூா் மகாராஜன், முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.