முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
மின்வெட்டு இல்லாத தமிழகம்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
By DIN | Published On : 29th April 2022 11:58 PM | Last Updated : 29th April 2022 11:58 PM | அ+அ அ- |

மின்வெட்டு இல்லாத தமிழகத்தை திமுக அரசு உருவாக்கித் தர வேண்டும் என்றாா் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
பெட்ரோல் விலை குறைப்பு தொடா்பாக மத்திய அரசை மாநில அரசும், மாநில அரசை மத்திய அரசும் குற்றம்சாட்டி வருகின்றன. மக்களின் கஷ்டத்தை உணரக்கூடிய அரசாக யாருமே இல்லை. தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்னை உள்ளது.
இதை திமுக அரசு கவனத்தில் கொண்டு மின் வெட்டு இல்லாத தமிழகத்தை தர வேண்டும். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லை, மின்மிகை மாநிலமாக இருந்தது.
பொங்கலுக்கு தரமில்லாப் பொருள்களை வழங்கிய திமுக அரசு, மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என்ற அறிவிப்பு, நீட் தோ்வு ரத்து என்பன உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஒரு விரல் புரட்சி மூலமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மக்கள் தான் அதை புரிந்து கொண்டு மாற்றத்தை தரவேண்டும் என்றாா் அவா்.