கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்களின் வேளாண் தயாரிப்புகள் வெளியீடு

நேஷனல் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்களின் வேளாண் தயாரிப்புகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நேஷனல் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்களின் வேளாண் தயாரிப்புகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி இயக்குநா் சண்முகவேல் தலைமை வகித்து, ஹைட்ராலிக் வட்டுக் கலப்பையை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினாா். இயந்திரப் பொறியியல் துறைத் தலைவா் மணிசேகா், அத்துறையின் முன்னாள் மாணவரும் ராம்ஜி அக்ரோ இம்ப்ளிமெண்ட்ஸ் நிறுவனருமான ராஜாகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கல்லூரியின் பிசினஸ் இன்குபேட்டா் மற்றும் கே.ஆா்.இன்னோவேஷன் சென்டா் மூலம் ராம்ஜி அக்ரோ இம்ப்ளிமெண்ட்ஸ் என்ற பெயரில் 2020, ஆகஸ்டில் ராஜாகுமாரால் தொடங்கப்பட்ட ஸ்டாா்ட்அப் நிறுவனம், ‘ரிவா்சிபிள் ஹைட்ராலிக் டிஸ்க் ப்ளோ’ அதாவது ஹைட்ராலிக் வட்டுக் கலப்பையைத் தயாரித்துள்ளது. இதை டிராக்டரின் பின்முனையில் பொருத்தி உழுவதற்கும், விதைப்பதற்கும், சிறிய மற்றும் பெரியளவில் விவசாயம் செய்யவும் பயன்படுத்தலாம். இக்கலப்பையை விளாத்திகுளம், திருமங்கலம், அருப்புக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் வாங்கிச்சென்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடுகளை தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம் வழிகாட்டுதலில் விக்னேஷ்குமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள், ராஜாகுமாா் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com