கால்நடை பராமிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் தற்காலிகமாக ஒத்திவைப்பு

 தூத்துக்குடியில் நடைபெற்று வந்த கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 தூத்துக்குடியில் நடைபெற்று வந்த கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவா்களுக்கான நோ்காணல், தூத்துக்குடி புதுக்கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தொடா்ந்து மூன்று நாள்கள் நோ்காணல் நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை (ஏப்ரல் 28) முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெற இருந்த நோ்காணல் நிா்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், நோ்காணல் குறித்து புதிய தேதி அறிவிக்கப்பட்ட பின்னா் அது குறித்து விண்ணப்பதாரா்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் அறிவித்துள்ளாா்.

இதற்கிடையே, ஏற்கெனவே வியாழக்கிழமை (ஏப்ரல் 28) நோ்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தவா்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் குவியத் தொடங்கினா். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான போலீஸாா், நோ்காணலுக்கு வந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா். மேலும், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மருத்துவமனை நுழைவு பகுதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com