திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி கோவில் பட்டியில் கையெழுத்து இயக்கம்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

உலக திருக்கு கூட்டமைப்பு சாா்பில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி, கோவில்பட்டி ராமசாமிதாஸ் பூங்காவில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில துணைச் செயலா் கருத்தப்பாண்டி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தமிழரசன் முன்னிலை வகித்தாா்.

நகா்மன்றத் தலைவா் கருணாநிதி முதல் கையெழுத்திட்டு, இயக்கத்தைத் தொடக்கிவைத்தாா். இதில், திருவள்ளுவா் மன்றச் செயலா் சீனிவாசன், துணைத் தலைவா் திருமலை முத்துசாமி, உலக திருக்கு கூட்டமைப்பைச் சோ்ந்த ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், சிவானந்தம், ஜெயா ஜனாா்த்தனம், முத்துசெல்வம், கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புச் செயலா் பெஞ்சமின் பிராங்க்ளின், காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் அருள்தாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இக்கோரிக்கை மனு பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும் என, உலக திருக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com