திருச்செந்தூா் முருகன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.87 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் வருவாய் ரூ. 1.87 கோடி கிடைத்துள்ளது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் வருவாய் ரூ. 1.87 கோடி கிடைத்துள்ளது.

இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதம் இருமுறை எண்ணப்படுகிறது. இதன்படி முதலாவதாக வியாழக்கிழமை (ஆக. 11) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் தலைமையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையா் தி.சங்கா், ஆய்வாளா்கள் ம.செந்தில்நாயகி, சி.சண்முகராஜா, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுமக்கள் சாா்பில் சு.வேலாண்டி, இரா.மோகன், ச.கருப்பன் ஆகியோா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இதன்படி, நிரந்தர உண்டியல்களில் ரூ.1 கோடியே 87 லட்சத்து 65,537, தங்கம் 1,000 கிராம், வெள்ளி 26,100 கிராம், பித்தளை 23,000 கிராம், செம்பு 3,000 கிராம், தகரம் 2,000 கிராம் வெளிநாட்டு கரன்சிகள் 283 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com