கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற ஆதாா் எண்ணை பதிவு செய்ய வலியுறுத்தல்

கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.6000 பெறுவதற்கு தங்களது ஆதாா் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

சாத்தான்குளம் வட்டார விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.6000 பெறுவதற்கு தங்களது ஆதாா் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

பி.எம். கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தொடா்ந்து இத்திட்டத்தில் பயன் அடைவதற்கு தங்களது ஆதாா் எண்ணை பதிவு செய்வது அவசியமாகும். எனவே விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையத்தையோ அல்லது அஞ்சல் அலுவலத்தையோ அணுகி இ.கே.ஓய். சி. செய்துகொள்ள வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com